சமையல் குறிப்பு

mutton-biryani-recipe

எங்களது தோழர்கள் சிலர் ( 4 முதல் 7 பேர் வரை) சமீபத்தில் சென்னையில் சாலையோர உணவகங்கள் முதல் பொன்னுசாமி போன்ற உணவகங்கள் வரையிலான அசைவ உணவகங்களில் ஒரு சர்வே நடத்தினார்கள். சர்வே னு சொல்லக் கூடாது.. அங்குள்ள சமையலாளர்களுடன் உரையாடி சில பொது அனுபவங்களை சேகரித்தனர். சில மாதங்கள் நீடித்த இந்த உரையாடல் எங்களில் பெரும்பான்மையாக இருந்த ஆண்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் தான் இந்தப் பதிவிற்கான காரணம்.

அசைவ உணவங்களை கேட்டகரியாக பிரித்த்தில் நான்கு வித விலையில் உணவுகள் கிடைக்குமிடமாக பார்த்து பேசினோம். பெரிய உணவகங்களில் கூட கேட்டரிங் படித்தவர்கள் மாத்திரம் தான் வேலை செய்வதாக நினைத்திருந்த நம்பிக்கை முதலில் பொய்த்துப் போனது. சாலையோர உணவகங்களில் தனியான பெண்கள் மாத்திரம் நடத்தும் உணவகங்களில் ருசி பூச்சியத்திலிருந்து ஒன்று வரை நீண்டு கொண்டே போனதும் வெள்ளிடைமலையாக காட்சி தந்த்து. அந்த உணவகங்களில் சில தள்ளுவண்டி கடைகளில் ஆண் பெண் இருவரும் இணைந்து வேலை செய்யும் இடத்தில் இது மேம்பட்ட ருசியுடன் இருந்த்தை காண முடிந்த்து. ஆனால் இது போன்ற கடைகளிலும் மீன் குழம்பு ருசியாக இருக்குமளவுக்கு மட்டனோ சிக்கனோ வாய்க்கு விளங்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நின்றுகொண்டே சாப்பிடும் சிறு உணவங்களில் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சிறுசிறு வேலைகளிலோ அல்லது அவசரமாக சாப்பிட்டு போக வேண்டிய உயர் வேலைகளிலோ இருப்பவர்களாக இருப்பதால் ருசி குறித்தோ தரம் குறித்தோ கேட்பார் யாருமில்லை. இந்த கடைகளில் சாம்பாருக்கும் சால்னாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போல தெரியவில்லை. முட்டைப் பொரியலுக்கும் முட்டைக்கோசு பொரியலுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து மாளவில்லை. இதில் சில மலையாளிகளது ஓட்டல் சிறப்பாக இருப்பதாக கருதினோம். எங்களது அணியில் இருந்த ஒரு மலையாள நாட்டு பெண் இதில் உள்ள வித்தியாசமே ருசி என்ற பலகீனத்தை சுட்டிக்காட்டி பலூனை காற்றை இறக்கி விட்டார்.

நடுத்தர உணவகங்கள் பெரும்பாலும் காற்று வாங்குகிறது. வடிவேலு காமடியில் வரும் அண்ணனுக்கு ஒரு மசாலா தோச பார்சேல் என்ற காமடி தான் இங்கெல்லாம் போகும் போது நினைவுக்கு வருகிறது. வாழ்ந்து கெட்ட மூடப்போகும் நிலையில் உள்ள இந்த உணவகங்களில் மாஸ்டர்கள் இல்லை என்பது தான் நிலைமை. ஆனாலும் கெத்து காட்டி சமாளிக்கிறார்கள். இந்த மாஸ்டர்கள் பெரும்பாலும் உயர் அசைவ விடுதிகளுக்கு போய் விட்டார்கள்.

உயர் விடுதிகளுக்கு அதிகமாக போக முடியவில்லை. அதே நேரத்தில் இதற்கு வெளியே நிற்கும் ஒன்லி பிரியாணி மாத்திரம் என்ற கடைகளுக்கும் போனோம். அதில் பல சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்தன.

ஒன்று எங்கெல்லாம் பிரியாணி சுவையில் புளிசாதம் போல இருக்கிறதோ அங்கெல்லாம் அண்டாவை உருட்ட மாத்திரம் தான் ஆண்கள் போகிறார்கள். அதற்கு முன் வரை பெண்கள் தான் எல்லா தயாரிப்பும். எங்கு சுவையாக இருக்கிறதோ அங்கு இசுலாமிய ஆண்கள் அதுவும் வயதானவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் கொத்து கறியும் கோழி பாயாவும் சுவையாக இருக்கிறதோ அங்கும் இதே நிலைதான். என்ன கொஞ்சம் பிற மதங்களை சார்ந்த ஆண்களும் வந்து இருக்கிறார்கள்.

மட்டன் அல்லது சுக்கா, கோழி வறுவல் போன்ற விசயங்களில் பெண்கள் ஈடுபடும் ஓட்டல்களில் இவை எல்லாம் கத்தரிக்காய் தொஸ்து போலத்தான் இருக்கிறது. ஆண்கள் செய்தால் கூட இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட மாஸ்டர்களோ இருக்குமளவு இருக்குமிடத்தில் ருசி மேம்பட்டு தான் இருக்கிறது. குறிப்பாக கத்தரிக்கா தொஸ்து மற்றும் ஆனியன் பச்சடியும் சான்சே இல்ல.

இப்படி நன்றாக நான் வெஜ் சமைக்க தெரிந்தவர்களில் பெரும்பான்மை ஆண்களாக இருப்பதும் பெண்களுக்கு சமையல் கலை இந்த விசயத்தில் வீக் ஆக இருப்பதும் எங்களது ஆய்வில் தெரியவந்த விசயம். இதை பானைக்கு ஒரு சோறாக பரிசீலிக்க முடிவெடுத்து எங்களது அறையில் சமையலை ஆண்கள் ஆரம்பித்தோம். ஒரு பெண் தோழரை நடுவராக வைத்துக் கொண்டு..

அதில் கருவாட்டு கொழம்பு வைப்பது குறித்த எங்களது அறிவினை பகிர்ந்து கொண்டு மூன்று தோழர்கள் சமையலில் ஈடுபட்டோம். கருவாடு என்றவுடன் சீலா அல்லது வாழை என்றோ அல்லது சிறு கருவாடான நெத்திலி என்றோ தான் முதலில் நான் எல்லாம் நினைத்தேன். ஒரு ராம்நாடு தோழர் வஞ்சிரம் கருவாடு சிறப்பாக இருக்கும் என சொன்னார். வஞ்சிரம் காஸட்லி என நினைத்து மறுக்க நினைத்தாலும் சரி போட்டோம்.

கால் கிலோ வஞ்சிரத்தை வாங்க அவர் பட்ட சிரத்தையே வேறு ஒரு லெவலுக்கு அவரை கொண்டு போனது. வால் பகுதியை தவிர்ப்பது. இரண்டாக பிளந்த பகுதியில் உள்ள நிறத்தை கொண்டு தரம் பார்ப்பது, மற்றும் முகர்ந்து பார்த்து துண்டுகளை பொறுக்குவது என களை கட்டியது கருவாட்டு மார்க்கெட்.

முதலில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் தேங்காய் சீரகம் இரண்டு பூண்டுப்பல் எல்லாம் போட்டு வதக்கியவர், அதனுடனேயே கழுவி வைத்த கருவாட்டையும் சேர்த்து வதக்கினார். இது புதிதாக இருந்த முறை.. அப்புறம் தேங்காய் புளி போட்டு தனியாக அரைத்துக் கொண்டார். இரண்டையும் ஒன்றாக்கி சூடு படுத்தினார். அடுத்து முட்டையை எத்தனை பேர் இருக்கோமோ அந்த எண்ணிக்கையில் உடைத்து அதில் ஊற்றியவர் அது கலங்காமல் பார்த்துக் கொண்டார். கடைசியில் சில துளி நல்லெண்ணையை மேலே ஊற்றி கருவேப்பிலை மல்லி பிய்த்துப் போட்டு இறக்கி விட்டார். இரண்டு மணி நேரம் ஆறிய பிறகு சூடான சோற்றில் விட்டு பிசைந்து சாப்பிட்டோம். கருவாடு நன்றாக கரைந்திருந்த்து. தேங்காயும் முட்டையும் கலந்த ரூசி சொர்க்கத்துக்கே எங்களை அழைத்துச் சென்றது. மூன்று நாட்களும் அந்த சட்டியை பூனை போல சுற்றி வந்து கொண்டிருந்தோம் எல்லோரும்.

ஆகவே தான் சொல்கிறோம். சமையல் வேலைக்கு அதுவும் அசைவ சமையல் வேலைக்கு பெண்கள் லாயக்கில்லாதவர்கள். அவர்கள் இவ்வளவு திறமை தேவைப்படாத ஏதாவது ஆபீஸ் வேலைக்கோ அல்லது அறிவியல் விஞ்ஞானி போன்ற வேலைக்கோ மருத்துவத்துக்கோ பொறியியல் கணினி துறைக்கோ அனுப்பி வையுங்கள். என் வார்த்தையில் நம்பிக்கையில்லாத ஆண்கள் வீடுகளில் நான் வெஜ் எடுக்கும் ஞாயிற்று கிழமைகளில் தனி சமையலை ஆரம்பித்து கலக்குங்கள்.

மூளைய ரொம்ப நாளைக்கு யூஸ் பண்ணாம ஃபிரஷ் ஷா வச்சிருந்தா தப்பு தான..

பிகு – அப்டியே நமக்கும் ஒரு பார்சேல்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s