24 மணி நேரத்தில் பூணூல் ’ஆல்’ மாற்றிப் பேசும் மருதையன்

 

இந்த பதிவு நேற்று நாக்கு புரண்ட பிறகு மருதையன் வகையறாக்கள் பேசிய வினவு பதிவு.

http://www.vinavu.com/2017/10/12/non-brahmin-priest-appointment-rights-need-to-be-win/.

தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்….

**

இது சரக்கடித்திருக்கும் போது அதாது முந்தா நேத்து மருதையன் பேசியது. (அதுவும் பத்து நாளா ஊரே பக்கத்தூர கேரளாவ உச்சிமோந்திட்டிருக்கும் போது வைகோ மாரி ’ஏதென்ச பார் ரோமைப் பார்… அன்று சீசருக்கு எதிராக ஆண்டனி மக்களிடம் பேசுகையில்..’ என்றெல்லாம் பாஸ் என்ற பாஸ்கரன் நல்லதம்பி போல பேசி அம்பலமான பிறகு – கொஞ்சம் தானே தனக்குள் வெட்கமடைந்த பின்)

http://www.vinavu.com/2017/10/11/debate-on-non-brahmin-priest-appointment-in-kerala/

…கேரளாவில் அமித்ஷா வகையறாக்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக பாதயாத்திரை, பஞ்சாமிர்த யாத்திரை என்று சீன் போடும் போதும் காலத்தில் அவர்கள் முகத்தில் கரிபூசும் விதமாக இந்த சமத்துவ நடவடிக்கை விளங்குகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார்.

தமிழகத்தை விட கேரள சமூகத்தில் ஆச்சாரம், சனாதனம், சடங்குகள், சமஸ்கிருத மயமாக்கம் அனைத்தும் அதிகமாகும். சிபிஎம் கட்சி கூட அங்கே பகுத்தறிவு பிரச்சாரத்தை ஒரு சமூக இயக்கமாக செய்வதில்லை. பாஜகஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே சித்தாந்த ரீதியாக மக்களை இந்துமதவெறியின் பெயரில் அணிதிரட்டும் போது அதை எதிர்த்து கட்சி ரீதியாக போராடினாலும் கருத்து ரீதியான போராட்டங்களை சிபிஎம் கட்சி செய்வதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்த அனைத்து சாதியனர் அர்ச்சகராகும் நடவடிக்கை ஆச்சரியமூட்டுவதோடு மனதார பாரட்ட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் இத்தகைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக குறிப்பான பங்கினை செய்துள்ள தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை என்பது பெரும் மானக்கேடாகும்

**

மொத நாள் பேசும்போதே அவங்க அதாது சிபிஎம் சித்தாந்த ரீதியில போராடுவதில்லை எங்கள மாரினு சொன்னாப்ல.. பட்.. எந்த சித்தாந்தம் னு மருதையன் சொல்லவே இல்ல.. அதுல ஒரு நேர்ம இருக்கு. இதான் அவர்ட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்.

சித்தாந்த ரீதியா போராடி தான் ஆறுமுக சாமிய திருச்சிற்றம்பல மேடைல ஏத்துனாங்க இல்லியா பின்ன.. சரி இதெல்லாம் கேக்காதீங்க.. அப்புறம் பொழப்பு நாறிடும்.

கருத்து ரீதியா போராடாம கட்சி ரீதியா போராடுறாங்க.. தெரில.. இதுக்கெல்லாம் எதாது மா லெ விளக்கம் மார்க்சே உயிரோட வந்தா கூட தர முடியுமானு தெரியல. கட்சியவும் கருத்தவும் பிரிக்கிற தெறம உங்க டாஸ்மாக் போராட்டத்துலயே தெரிஞ்சுது. அதுதான் இங்க வர நாறுது. சந்தர்ப்பவாதங்களுக்கெதற்கு சித்தாந்த வெளக்கம் இல்லியா மருதையன்.

நான் சிபிஎம் கட்சிக்கு வண்டுமுருகன் என அணிகளுக்கு பாடம் எடுத்துறாதீங்க. இந்த விசயத்துல அவங்களுக்கு இல்ல.. இந்த செயலுக்கு நான் வண்டு முருகன் என்ன.. அத விட மோசமா கூட ஆதரிப்பேன். சேட்டன இறுக்கிப் பிடிச்சு ஒரு உம்மா குடுப்பேன். ஏன்னா.. அந்த கட்சில நம்பூதிரிபாடுகள் வந்தாங்க..நாயனார்கள் வந்தார்கள். நாயர்களும் வந்தார்கள். கடசில ஒரு ஈழவனுக்கு அந்த வலி தெரிந்து இருப்பதால் தான் இது சாத்தியமாயிருக்கு.

மிகப்பெரிய சாதனைய செஞ்சிட்டு பினராயி விஜயன் அமைதியா இருக்கத ரகசியம் உங்களுக்கு புரியாது. தமிழ்நாட்டு முற்போக்காளர்கள் எல்லாம் பட்டிமன்ற பேச்சாளர்கள் தான். நீதிமன்றத்துக்கு போனா ஒரு மாநாடு, ஒரு வெற்றி விழா கூட்டம், வீர வாள் பரிசு.. என விழா நடத்திட்டே இருப்பீங்க. என்ன பாப்பான் மாத்ரம் மிஸ்சிங். ஆனா காரியம் ஒண்ணும் நடக்காது. கடசியா உச்சநீதி மன்றம் போய் தோத்துட்டு உச்சிகுடுமி நீதிமன்றம் அப்டினு திரும்பவும் வந்து பிரச்சாரம் பண்ணுவீங்க. இதுக்கு பத்து வருசம். பெரியார் இருந்திருந்திருந்தா இத மொதல்ல ஏ சொல்ல வேண்டியதான.. பணத்த ஏன்டா வேஸ்ட் பண்ணீங்க. பத்து பேரு நேர திருவரங்கம் கோவில்ல நம்ம பயிற்சி பெற்ற ஆளுங்கள விட்டு பூசய நடத்துங்கடா னு சொல்லிருப்பாரு. ஏன்னா அவரு அட்டக்கத்தி கெடயாது.

பினராயி விஜயனும் பெரியாரின் சரியான மாணவர் தான். அதுனால தான் தான் ஏதும் இப்போ பேசி அத பாப்பானுக கோர்ட்ல பயன்படுத்திருவானுக ன்றதுக்காக அமைதி காக்குறாரு. ஏன்னா இது 100 வருசத்துக்கு முன்ன அவரோட முப்பாட்டன்கள அந்த தெருவுக்குள்ளயே அனுமதிக்காத நெலமய அனுபவித்த ஈழவ சமூகத்து விஜயனது சொந்த பிரச்சினையும் கூட. மருதையன் போன்றோருக்கெல்லாம் இது டிசைரபிள். பட் பினராயி விஜயனுக்கு இது எசன்சியல்.

**

ரெண்டு நாளைக்கு முன்ன கேரளாவின் முள்ளமணப்புரம் சிவன் கோவிலுக்கு 22 வயது இளைஞனாக அர்ச்சக பதவிக்கு போயிருக்கும் தலித் சாதியில் பிறந்த யது கிருஷ்ணன் போயிருக்கானே.. அங்கயேவா இருந்துருவான். அவன் சீனியராகுற அன்னைக்கு பத்மநாபனுக்கு அவன் கையால தான் நைவேத்யம் கிடைக்கும். அன்னிக்கு அவன் பத்மநாபன மனசார பூசிப்பானா நினைக்குறீங்க..’ஏன்டா..என் முன்னோர்களின் ரத்தப்பணத்தை உனக்கு தாசன் என சொல்லியே மார்த்தாண்டவர்மாக்கள் தங்கமாக மாற்றி உன் பாதங்களுக்கடியில் நிலவறையில் பூட்டியதை பார்த்தும் பார்க்காமல் போன உனக்கெல்லாம் நெய் ஒரு கேடா’ என கேட்காமலா விடுவான்.

ஆமா .. நீங்க சொல்ற மாரி பத்மநாப சாமி கோவில்ல இன்னும் பார்ப்பனர்கள் தான் இருக்காங்க.. சபரிமலைக்கு பெண்கள் போக முடியல தான். அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் புரட்சியை போல சமூக புரட்சியை ஒரு நாளில் நடத்த முடியும் என பேராசான் லெனின் சொல்லவில்லை. ஆனால் அதற்கு எதிராக நிறையவே சொல்லிருக்காரு.

சரி விடுங்க.. இதெல்லாம் ஒரு மார்க்சிய லெனினிய வழி வந்தவர்கள்ட்ட பேச வேண்டியது.

தாம்ப்ராஸ் குழுவிடம் போய் பேசுறது என் தப்புதான்.

பின்குறிப்பு – இன்னும் ஆயிரமாண்டுகளுக்கு பார்ப்பனர்கள் சத்ரு சம்ஹார பூஜை செய்யும் போதெல்லாம் அதில் பினராயி விஜயனது பெயர் இருக்கும். அதுதான் அவருக்கு பெருமையும் கூட. மகாபாரத கிருஷ்ணன் பேச்ச கேட்ட விஜயன் என்ற பெயரை தப்பித் தவறி கூட இனி பார்ப்பனர்கள் உச்சரிக்க மாட்டார்கள். ஏன்னா இந்த விஜயன் அவங்களோட பொழப்புல மண்ணள்ளிப் போட்டுட்டாரே.

விஜயனுக்கு..

வாழ்த்துக்கள். இதுக்கு அடுத்தபடியா இனிமே அர்ச்சகர் பதவியையே காலி பண்ணிட்டு சிடி போட்டு பூசைய நடத்தப் போறோம்னு தேவசாம் போர்ட அறிவிக்க சொல்லுங்க. பாப்பானுக உங்க கால்ல விழுந்தாது, தலித்துகள உள்ள விட்டாலும் ஓகே நாங்க கோர்ட்டுக்கெல்லாம் போக மாட்டோம். எங்களயும் உள்ள அர்ச்சகரா விட்டு வைங்க னு கதறுவானுங்க. ஒரே நாள்ல இத செய்யணும்னு சொல்ல நான் மருதையன் கிடையாது. நன்றி

மருதையனுக்கு இந்த தீர்வ கேட்டா அவங்களோட நான்காம் தொழிற்புரட்சி எதிர்ப்பு நினைவுக்கு வரும். அதாது ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்சால் நாம அடிமையாகுறோம்பாங்க இல்லியா அது. அதாங்க ரெண்டாயிரம் வருசமா கஷ்டப்பட்டு அப்பன் தன் பிள்ளைக்கு மாத்ரம் ரகசியமா சொல்லித்தந்த தனித்திறன் மிக்க மந்திரத்த கேசட் என்ற ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ச வச்சு ரீபிளேசு பண்றது தான் அடிமை யுகத்துக்கு வழி சமைக்குமாம். கேக்குறவன் கேணயா இருந்தா கேப்பல நெய் வடியும் தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s