உடன்பிறப்பினது ‘நேர்மை”

bald-brother

சென்னை மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்புகளில் எல்லாம் உடன்பிறப்பையும் உட்கார வைத்துள்ளனர். சில இடங்களில் பேசவும் அனுப்புகின்றனர். முன்னர் ஐடி விங்க் பொறுப்பிலும் வைத்திருந்தனர். மா.அ.க வின் மைய கதாபாத்திரங்களில் ஒன்றாகவும் இருக்க ‘கூடும்’.

1990ல் பள்ளி இறுதி வகுப்பு முடித்த உடன்பிறப்பு ஒரு முன் பெஞ்ச் மாணவர். கொஞ்சம் தகிடுதத்தம் செய்யவும் கூடியவர். அந்த ஆண்டு தான் கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரியாக வரும் மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் ல் 5 ஐ கூட்டிக்கொள்ளலாம் என அனுமதி கொடுத்திருந்தார். தந்தை பட்டதாரி என நன்கு தெரிந்தும் உடன்பிறப்பு யாருக்கும் சொல்லாமல் 5 மதிப்பெண்களை கூட்டிக்கொண்டது. நல்ல பொறியியல் கல்லூரி என தேடி மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்தது.

சோதனை யாரிடமும் சிக்க மாட்டோம் என தைரியமாக தவறு செய்பவர்களுக்கும் சில நேரங்களில் வந்து விடுகிறது. அப்படியே அவர் முதல் தலைமுறை பட்டதாரிதானா என உறுதி செய்ய வந்த அரசு ஊழியர்கள் சார்பில் வரவே, குட்டு வெளிப்பட்டது. உடன்பிறப்பும் அரசால் பொறியில் கல்லூரியில் இருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். குடும்பமே மன வருத்தம், துயரம் என ஆழ்ந்திருக்க ஒருதரப்பில் இந்த குட்டினை பிடிக்காத உறவுக்கார நபர் ஒருவர் அரசிடம் போட்டுக்கொடுத்ததாக வேறு பேசி மனதை ‘ஆற்றுப்படுத்திக்’ கொண்டார்கள்.

உடன்பிறப்பு செய்த தவறை யாரும் சுட்டிக்காட்டி கண்டிக்க முன்வரவில்லை. அவருக்கும் இது மான பிரச்சினையாகத்தான் இருந்ததே தவிர குற்ற உணர்வாக இன்றும் இல்லை என நன்கு தெரியும். 90 முடிவதற்குள்ளேயே டிஸ்மிஸ் ஆன உடன்பிறப்பு அடுத்த ஆறு மாத காலத்தை ஓட்டுவதற்கு என நகரின் உறவினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்தார்கள். அவரோ அங்கும் இருக்க பிடிக்காமல் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டார்.

முன்னர் படித்த கிறித்தவ பள்ளியின் தாளாளர் மூலம் அங்கிருந்த யாருமற்றோர் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். மதுரையின் சுற்றுவட்டாரத்திலே இருந்த காரணத்தால் சில நண்பர்களோடு அவரால் தொடர்பு கொள்ளவும் முடிந்தது.

அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய காலத்துக்கு மிக முன்னரே வீடு திரும்பிய அவர் படிப்பதற்கு நல்ல சூழலை வீட்டில் போதுமான அளவுக்கு உருவாக்கித்தான் தந்தார்கள். ஆனாலும் இம்ப்ரூவ்மெண்ட் மதிப்பெண் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதாலும், நுழைவுத்தேர்வு மதிப்பெண் கணிசமாக குறைந்து போனதாலும் அரசு சீட்டில் கடைசி நேரத்தில் தான் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. வேலூருக்குப் போய் அங்கிருந்து நெல்லை பொறியியல் கல்லூரிக்கு வந்தார்.

மதுரை யாருமற்றோர் விடுதியில் தங்க நேர்ந்த ஓரிரு மாதங்களை தன் வாழ்வின் துன்பகரமான நாட்களில் ஒன்றாக பலரிடமும் பல முறை சொல்லி புலம்பி இருக்கிறார். அவரது மனைவி ஒருமுறை இதனை மிகவும் சோகமாக சொன்னபோது நானெல்லாம் எந்த திருட்டுத்தனமும் செய்யாமலேயே நியாயத்திற்காக நின்று பல ஆண்டுகளைக் கழித்துக் கொண்டிருக்கும் துன்பக்கேணியைப் பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி காலை ஆட்டிக் கொண்டிருந்தார் உடன்பிறப்பு.

அந்த ஓரிரு மாதங்களில் அங்கிருந்த கத்தோலிக்க திருச்சபையில் பாவமன்னிப்பு கோரினாரா என்று அந்த பிஷப் இடம் தான் கேட்க வேண்டும்.

கல்லூரி கால போராட்டங்களால் பிற்காலத்தில் இழப்பு நிச்சயம் எனத் தெரிந்த பிறகும் நியாயத்திற்காக நின்றபோது என்ன உணர்வு இருந்த்தோ அது குறித்த பெருமிதம் தான் இன்றும் எனக்கு இருக்கிறது. அங்கீகரிக்கப்படுவோம் என்பதற்காகவோ அல்லது பிற்காலத்தில் நினைவுகூர வேண்டியிருக்கும் என்பதற்காகவோ அப்படியான பாத்திரத்தை ஏற்கவில்லை. அந்த நேரத்திற்கும் தேவைக்கும் அது சரியாக இருப்பதாக பட்டதால் மட்டுமே ஏற்றேன்.

உடன்பிறப்பின் சாதிமறுப்பு திருமணத்திற்கு குடும்பத்தில் நான் மட்டும் வரும்போது ஆசை வார்த்தைகளும் உறுதிமொழிகளும் ஏராளம் தரப்பட்டது. மீறினால் என்ன செய்வோம் என்றும் மிரட்டினார்கள், பின்னர் செய்தும் காட்டினார்கள். அப்படி செய்வதற்கு உடன்பிறப்பே துணை நின்ற பொழுதுகளை முன்னரே முகநூலில் எழுதிய போதுதான் என் மீது அமைப்பில் நடவடிக்கை எடுக்கவும் முன் வந்தார்கள் என்பது வேறு விசயம்.

அந்தப் பதிவில் ஊர் சொத்தை ஆட்டயப் போட மா.அ.க ன் முக்கிய நபர் வழிகாட்டியதாக உடன்பிறப்பே சொன்னதால் தான் வெர்சன் 2.0 ஆ என ஆவேசத்துடன் அந்தப் பதிவை எழுதினேன். மா.அ.க ன் அடுத்த முக்கிய நபருக்கு எனது ’நேர்மை’ குறித்து நன்கு தெரியும் தான். ஆனாலும் தனது நிலைப்பாட்டை ஒன்றுக்கு தக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

வாழ்வின் மிகச் சவாலான பொழுதுகளை தடைகளைத் தாண்டும் குதிரையைப் போல கடந்து வந்து விட்டேன். இன்னும் சவால்கள் இருக்க கூடும். இதுவரை இருந்த காலம் போலவே தான் நானும் இருப்பேன். யாருக்காகவும் அல்லது எதற்காகவும் அதனை கூட்டியோ குறைத்தோ வைத்துவிடப் போவதில்லை.

ஆனால் நம்பர் 2.0 க்கு கடந்த இரண்டு மாதமாக செல்பேசி மூலம் தொடர்பு கொண்டேன். எண்ணை அடையாளம் கண்டுகொண்டு கட் பண்ணினார். அமைப்பில் மீண்டும் சேர்வதைப் பற்றி மெசேஜ் அனுப்பினேன். பதில் இல்லை. இந்த காலகட்டம் முழுவதும் ‘நான் மணி’ செயல்படவும் இல்லை. வேலை, படிப்பு என்று காலம் ஓடியது.

ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் தேவைப்படுவது போலவே எந்த பதிலும் இல்லாத நிலையில் நான் மணி இதோ இயங்க ஆரம்பித்து விட்டது.

ஒரு ‘கிரிமினல்’ குற்றவாளியாக 17 வயதிலேயே மாறிய உடன்பிறப்பு இன்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் உட்கார்ந்து யோக்கியன் போலப் பேச முடிகிறது. (இதை உங்க அமைப்பில யோக்யன் வேற யாரும் இல்லையா னு நான் கேட்பதாக புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்)

தவறுகளை தட்டிக் கேட்டதாலேயே ‘தரை டிக்கெட்’ ஆக மாறி வெளியில் நிற்கிறேன்.

இல்லை. அவர்களால் நிறுத்தி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். தடுப்பதால் காற்றின் ’திசை’ தான் மாறுமா?

மருதையனுக்கு இது நன்கு புரிந்திருக்கும்.

(தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் – குறள் 114).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.