கோமாளிக்கூத்து – சட்டமன்ற முற்றுகை – மக்கள் அதிகாரம்

peoppower
இன்று முற்பகல் 11 மணிக்கு தங்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை ஏவி விட்டுள்ள போலீசு ராஜ்யத்திற்கெதிராக தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளார்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று காவல்துறை மானியக் கோரிக்கையும் நடக்கவில்லை. 22 ஆம் தேதிதான் நடக்கிறது.

சரி என்னதான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லா ஆர்ப்பாட்டம் போராட்டத்திற்கும் உடனடியாக அனுமதி தராமால் நீதிமன்றம் போய் உத்திரவு பெற்றுதான் நடத்த வேண்டியிருப்பதாகவும், மக்களை சார்ந்து இயங்கும் தங்களைப் போன்ற சிறு அமைப்புகளால் இது கட்டுபடியாகாத காரியம் என்பதும் தான் நேற்று அவர்கள் கூடுதல் டிஜிபி சட்டம் ஒழுங்கு அலுவலகத்தில் கொடுத்த மனுவின் ஒரு பாதி. இன்னொரு பாதி தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் பொய்த்தன்மை குறித்த புலம்பல்கள்.

யாரை எதிர்த்து போராட்டம் முற்றுகை என அறிவிக்கின்றோமோ அவனிடமே போராட்டத்துக்கு முதல் நாள் நல்ல பிள்ளையாகப் போய் மனுக்கொடுக்கும் போராட்டம் வெள்ளையன் ஆண்ட போது காந்தியின் காங்கிரசால் கூட நினைக்க முடியாத அகிம்சா வழிமுறை. இதை செய்துவிட்டு நாளைக்கு முற்றுகையும் நடத்துவார்கள் என்றால் நம்பவா முடிகிறது. எல்லாமே எங்காத்துக்காரும் கச்சேரிக்கு போனாரு கதைதான்.

எல்லாத்துக்கும் மேல இதொன்னும் புதுசு கிடையாதே..எல்லா அமைப்புக்கும் தினசரி நடக்கிறது தானே. கோர்ட் ஜனநாயகப்பூர்வமா இருக்க மாரி போலீசையும் ஜனநாயகப்பூர்வமா இருக்க சொல்றீங்க. அதாது இருக்கத அரசு அமைப்புக்குள்ளயே ஒரு தீர்வ முன்வைக்குறீங்க..பலே வெள்ளயத்தேவா.. இதைத்தான சட்டமன்றத்துக்கு போனவிங்க மேல நீங்க வச்ச விமர்ச்னம்.

இதுக்கு வைகோ ட்ட எல்லாம் போய் ஆதரவு கேட்டீங்க போல.. சிபிஐ கட்சிட்ட ம்ம்

***
ப்ரூத்தோனின் செல்வாக்கின் கீழ் இருந்த ஒரே தொழிலாளி வர்க்கமான பெல்ஜிய தொழிலாளி வர்க்கத்தை ஹெகல் சொல்வது போல ‘சூன்யத்திலிருந்து சூன்யத்தின் வழியாக சூன்யத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது’ என்று எள்ளி நகையாடுவார் பிரெடரிக் எங்கெல்ஸ். ப்ரூத்தோனியம் செல்வாக்கு செலுத்தும் இயக்கங்களின் அரசியலும் நடைமுறையும் எதன் வழியே எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு கலங்கரை விளக்கமாய் சாட்சி பகர்கிறது மக்கள் அதிகாரம்.

’கழுத கெட்டா குட்டிச் சுவரு
மக்கள் அதிகாரம் திக்கினால் சட்டமன்ற முற்றுக”

என ஒரு நண்பர் நக்கலாகச் சொன்னார். எனக்கு அதில் உடன்பாடில்லை. தன் இருத்தலின் மூலமாக அறிவியலை அரசியலை மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்தை புறந்தள்ளும் பிலிஸ்டைன்கள் இவர்கள். மார்க்சியத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்புகள். அறுத்தெறியப்பட வேண்டிய நச்சுச் செடிகள்.
**
இதற்கான விளம்பரத்த பார்த்தால் தான் சகிக்க முடியல. ஒண்ணு தியாகுவை வைத்து பேச சொல்லிருக்காங்க. இன்னும் பலரும் பேசிருக்காங்க. அதுல முகிலன் மீது பதியப்பட்டது போராளிகளை கெட்டபெயரெடுக்க வைப்பதற்காக புனையப்பட்ட வழக்காம். புகார் கொடுத்த பெண்ணுக்கு மக்கள் அதிகாரம் வழங்கிய தீர்ப்பு இது. ஆலமரத்தடி நாட்டாமைகள்தான் இந்த அமைப்பு என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?

தனிநபர்களுக்கு பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டால் கூட இதில் வந்து கலந்து கொள்ளலாம் என்று சொல்லிருக்காங்க. எனக்கு என்ன தோணுதுன்னா..

மா.அ.க வோட சட்டமன்றம் எங்கே னு சொன்னீங்கன்னா..

எங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த பெரியவரோட சேர்த்து கணக்கு தீத்துக்குவோம்.

நான் ரெடி..நீங்க ரெடியா

P.S: ஒரு படத்துல வடிவேலு பேங்க்ல கொள்ளையடிக்க தப்புத்தப்பா எழுதிக் கொண்டுபோய் மேனேஜர்ட்ட கொடுப்பாரு. கொள்ளையடிக்கிறத வெள்ளையடிக்கிறதுன்னும், பண்டல சுண்டல்னும் எழுதிருப்பாரு. மேனேஜரு ஏம்பா இங்க சுண்டல் வியாபாரமா நடக்கு என கலாய்ப்பார். அதேமாரிதான் நீங்க டிஜிபிக்கு எழுதுன மனுவும் இருக்கு. டிஜிபின்னா தமிழ்நாட்டுக்கு ஒருத்தர்தான். அதுல சட்டம் ஒழுங்கு மட்டும் வராது, எல்லாமுமே வரும். இது மாநில அளவில கட்சி நடத்துற மக்கள் அதிகாரம் வெண்ணெய்களுக்கு தெரிஞ்சிருக்கணும். காமராசர் சாலைல டிஜிபி ஆபீசு இருக்கு. நீங்க சொல்லவரும் ராஜாஜி சாலை ஆபீசு அடிசினல் டிஜிபி ஆபீசு. அதுதான் சட்டம் ஒழுங்கு பிரிவை பாதுகாப்பது. அதாது இவரு கூடுதல் டிஜிபி னு சொல்வாங்க. நீங்க அவரையும் டிஜிபி ஆக்கிட்டீங்க. இதப் பாத்து அந்த போலீசுக்காரங்க எப்டி விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாங்கனு நெனச்சுப் பார்த்தேன்..

அந்த ரைட்டர் இப்டி சொல்லிருப்பாரு. மொதல்ல டிஜிபி க்கும் கூடுதல் டிஜிபிக்கும் வித்தியாசத்த தெரிஞ்சுக்க சொல்லு. அப்புறம் பாக்கலாம் மார்க்சியத்த படிக்கத பத்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.